அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர்

118

தல அஜித் தொடர்ந்து சிவா இயக்கத்திலேயே நடித்து வந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு நேர்கொண்ட பார்வை மூலம் வேறு ஒரு இயக்குனருடன் அஜித் பணியாற்றி வருகின்றார்.

ஆம், எல்லோருக்கும் தெரிந்தது தான், சதுரங்கவேட்டை, தீரன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய வினோத் தான் நேர்கொண்ட பார்வை பட இயக்குனர்.

இந்நிலையில் தற்போது வினோத் தான் அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர் என்றும் கூறப்படுகின்றது.

அப்படத்தில் இசை ஜிப்ரான் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது, விரைவில் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.