தடம்’ படத்தின் இணையான அருண் விஜய் – மகிழ் திருமேனி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளனர்.

150

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய், ஸ்மிருதி வெங்கட், தன்யா ஹோப், வித்யா ப்ரதீப், சோனியா அகர்வால், பெப்ஸி விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தடம்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அருண் விஜய் நாயகனாக நடித்த படங்களிலேயே, அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் ‘தடம்’ நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் மகிழ் திருமேனி.

கதை முழுமையாக முடிவானவுடன் தான், யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று முடிவு செய்யவுள்ளார். அப்படத்தை முடித்துவிட்டு, இந்தாண்டு இறுதியில் மீண்டும் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் மகிழ் திருமேனி.

‘தடையற தாக்க’, ‘தடம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, மீண்டும் மூன்றாவது முறையாக இக்கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது.