தேதியை போஸ்டர் ஒன்றின் மூலம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்த அமலாபால்

191

பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் சட்ட முறைப்படி கடந்த 2017ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின் அமலாபால் தீவிரமாக சினிமாவில் நடித்து வந்த நிலையில் இவரது நடிப்பில் விரைவில் ஆடை படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டர் ஒன்றின் மூலம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்த அமலாபால், நான் சண்டை போடுவேன். வாழ்வேன். பெரியதோ, சிறியதோ தடைகள் வரட்டும். நான் ஜொலிப்பேன். உயரத்தில் நிற்பேன். பிரச்சினைகளை பொடிப்பொடியாக்கி, ஊதித் தள்ளுவேன். எனது வலிமையை தான் நான் நம்புகிறேன். சுதந்திரமும், சந்தோஷமும் தான் முக்கியம். உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் நீங்கள் தோற்க மாட்டீர்கள். இது தான் நான். இது தான் எனது ‘ஆடை’யின் கதை என உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்