மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக எடுக்கிறார் இயக்குநர் ஏ.எல். விஜய்

90

ஜெயலலிதாவின் வாழ்க்கையும் தன் வாழ்க்கையும் ஒரே மாதிரியானது தான் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக எடுக்கிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். அந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

இந்நிலையில் கங்கனா படம் மற்றும் ஜெயலலிதா பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

விஜய் கதை சொன்னபோது அதற்கும் என் வாழ்க்கைக்கும் நிறைய தொடர்பு இருந்ததை உணர்ந்தேன். நான் என் வாழ்க்கை வரலாற்றை படமாக்க நினைத்த நேரத்தில் தலைவி வாய்ப்பு வந்தது. என் கதையா, அவர் கதையா என்று யோசித்தபோது ஜெயலலிதாவின் கதையில் நடிப்பது என்று முடிவு செய்தேன்.