ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்

135

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் SK-14.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.

பல நாட்களாக இழுபறியில் இருக்கும் SK 14 படம் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தால் கைவிட்டுவிட்டது என்றும் மீதிப்படத்தினை சிவகார்த்திகேயன் தனது SK ப்ரொடுக்ஷன்ஸ் மூலம் தயாரிப்பார் என்றும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இந்த செய்தி உண்மையா என்பதை அறிய படத்தின் இயக்குனர் ரவிக்குமாரை தொடர்பு கொண்டோம்.

இது குறித்து தனக்கு எந்த அப்டேட்டும் இதுவரை வரவில்லை என்றும் Sci-Fic மற்றும் ஏலியன் சம்மந்தப்பட்ட படம் என்பதால் நிறைய CG காட்சிகள் இருப்பதாகவும் அந்த வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதம் இருப்பதாகவும் விரைவில் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.